Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி ! தடுக்க அரசின் நடவடிக்கைகள் என்ன ?

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (14:09 IST)
இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி ! தடுக்க அரசின் நடவடிக்கைகள் என்ன ?

கடந்த வருடம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
 
இந்த நிலையில் இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில்  உள்ள கல்புர்கி என்ற மாவட்டத்தில் வசித்து வந்த 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். 
 
76 வயதான அவர் பெயர் முகமது சித்திக் என்பதும்,  சவூதி அரேபியாவில் இருந்து அவர் நாடு திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா அச்சம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்,அவர் இன்று உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று உறுதியாகத் தெரியவில்லை; எனவே இந்தியாவில் கொரொனா வைரஸிற்கு முதல் உயிரிழப்பா என்ற பலவித வினாக்களை எழுப்பியுள்ளது.
 
சீனாவில் மக்கள் தொகை அடர்ந்தி அதிகம் , இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இரு நாடுகளும் எல்லை முதற்கொண்டு அருகாமையில் உள்ள நட்பு நாடுகள்.
 
எனவே வல்லரசான உயர்ந்துள்ள சீனாவைப் போன்று, குறுகிய காலத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க பலவித தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மருந்துவமனை, பாதுகாப்பு வழிமுறைகள் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகள், மாஸ்க்,  ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக் கொண்டு மக்களுக்கு எந்த சூழ்நிலையில் எந்த ஆபத்திற்கும் உதவுகின்ற நிலை இந்தியாவில் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்ப்பார்ப்புகள்.

ஏனெனில் இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. பொதுஇடங்களில் மக்கள் கூடுவதையும் அரசு தவிர்த்து தடை போட்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது.

இன்னொரு பக்கம் கேரளாவில் பத்தினம் திட்டாவில் பறவைக்காய்ச்சல் பயமும் மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளது. அதனால் கறிக்கோழி விலை குறைந்துள்ளது.
 
சாதாரண காய்ச்சல், சளிக்கு கூட மாணவர்களும் , குழந்தைகளும் இருமுகிறவர்களுக்கு அருகில் செல்லுவதற்கே பயப்படும் சூழ்நிலையை ஹிட்லர் போன்ற பயத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டது. 
 
மாணவர்களுக்கு இறுதி பொதுத்தேர்வு காலம் என்பதால் அரசு கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. அதை அலைப்பேசி அழைப்பின் போது விழிப்புணர்வு செய்யும் அரசு அதை தமிழிலும் அந்தந்த மாநில மொழிகளிலும் செய்தால் மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். 
 
வரும் முன் காப்பதே நம் அரசுக்கும் அரசின் அறிவுறைகளைக் கேட்டாலும் தன் சுத்தத்தைப் பேணுவதே நாட்டு மக்களுக்கும் நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments