Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பாதிக்கப்பட்டவர் பூரண நலம் – அமைச்சர் தகவல் !

Advertiesment
கொரோனா பாதிக்கப்பட்டவர் பூரண நலம் – அமைச்சர் தகவல் !
, புதன், 11 மார்ச் 2020 (08:42 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் முழுவதுமாக குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் பூரண குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் டிவிட்டரில் ‘நம் மாநிலத்துக்கு ஒரு நல்ல செய்தி. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் முழுமையாகக் குணமடைந்தார். இவ்வளவு வேகமாகக் குணமடைந்ததற்குக் காரணம் மிகச்சிறந்த சிகிச்சையும், நிபுணத்துவமும்தான். தற்போதைய நிலவரப்படி தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பீதி பற்றிய அச்சம் குறைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கணவர் இவ்வளவு கொடூரமானவரா ? அதிர்ச்சியில் மனைவி செய்த காரியம் !