Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சி செய்யலாமா...?

Webdunia
கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக எளிமையான ஆசனங்கள் தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி மிகவும் முக்கியம். எல்லாவற்றையுமே, ஒரு யோகா பயிற்சியாளர் மூலம் கற்று, செய்வது நல்லது. 

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும். இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா  பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.
 
கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமலிருக்க உதவும். புத்துணர்ச்சியுடன் இருக்கவும் செய்யும்.
 
உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் போது அதை எதிர்கொள்ளவும் உதவும். பிரசவம் வரை மன அழுத்தம் இல்லாமலிருப்பதற்கு யோகா பயன்படும். மேலும் சுகப்பிரசவம் ஏற்பட உதவும். கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத  ஆசனங்களை செய்ய வேண்டும்.
 
இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை  பயக்கும்.
 
ஹத யோகா:  ஹதயோகா என்பது கர்ப்ப காலத்தில் செய்யப்பட வேண்டிய மென்மையான மற்றும் மிகவும்  ஆரம்பநிலை யோகா பயிற்சியாகும். 
 
ஆனந்த யோகா: ஹத யோகா தொடர்பான, இந்த வடிவம்  ஆனந்த யோகாவாகும்.  தியானம்,  மூச்சுப்பயிற்சி மற்றும்  மந்திரங்கள் வாசித்தல் போன்றவை இவற்றுள் அடங்கும். 
 
வினி யோகா: வினி யோகா என்பது கர்ப்ப காலத்தில் செய்யப்பட வேண்டிய முக்கியமான சுவாசப் பயிற்சி ஆகும். 
 
சிவானந்தா யோகா:  இந்தப் பயிற்சியின் மூலம், கர்ப்பவதிகளின் நேர்மறை சிந்தனைகள் அதிகப்படுத்தப்படுகின்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments