Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிக பாலியல் புகாரில் சிக்கிய இயக்குனர் தமன்னாவிடம் எப்படி நடந்துள்ளார் பாருங்க!

அதிக பாலியல் புகாரில் சிக்கிய இயக்குனர் தமன்னாவிடம் எப்படி நடந்துள்ளார் பாருங்க!
, திங்கள், 18 மார்ச் 2019 (18:54 IST)
மீடூ  ஹேஸ் டேக் மூலம் கடந்த சில மாதங்களாகவே பெண்கள் தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை வெளிப்படையாக சமூகவலைத்தளத்தில் தெரிவித்து குற்றவாளிகளை முகம்சுளிக்க வைத்தனர். இந்த விவகாரத்தில்  அதிகம் சிக்கியவர் தான் பிரபல இயக்குனரும் நடிகருமான சஜித் கான். 
 

 
பாலிவுட் இயக்குனரான  இவர்  பிரபல பெண் இயக்குனர் ஃபரா கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி நடிகை ராசீன், உதவி இயக்குனர் சலோனி சோப்ரா மற்றும் ஒரு பிரபல பத்திரிகையாளர் என அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டை இவர் மீது வைத்தனர். இதனால் நெட்டிசன்கள் மத்தியில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டார் சஜித்
 
இப்படி தொடர் சர்ச்சையில் சிக்கி வந்த சஜித் கான் மிகவும் நல்லவர் என்று நடிகை தமன்னா கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

webdunia
இதை பற்றி தமன்னா கூறியதாவது,   சஜித் கான் இயக்கத்தில் நான் நடித்த ‘ஹிம்மத்வாலா’ , ‘ஹம்சகல்ஸ்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பின் போது அவர் எனக்கு எந்தவித  தொந்தரவையும் தந்ததும் இல்லை. அதே போல என்னிடம் தவறாக நடந்து கொண்டதும் இல்லை. அவருடன் பணியாற்றும் போது நான் மிகவும் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் தான் உணர்ந்தேன். மற்றவர்கள் கூறும் புகார் பற்றி எனக்கு தெரியாது, அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம். என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தை அரசியலுக்கு அழைத்த சுசீந்திரன்.! கலாய்த்தாரா சிம்புவின் தம்பி? சிம்பு விளக்கம் !