Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தை அரசியலுக்கு அழைத்த சுசீந்திரன்.! கலாய்த்தாரா சிம்புவின் தம்பி? சிம்பு விளக்கம் !

அஜித்தை அரசியலுக்கு அழைத்த சுசீந்திரன்.! கலாய்த்தாரா சிம்புவின் தம்பி? சிம்பு விளக்கம் !
, திங்கள், 18 மார்ச் 2019 (18:09 IST)
நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று ட்வீட் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் சுசீந்திரனை கலாய்த்து சிம்புவின் தம்பி குறளசன் கருத்து தெரிவித்ததாக தகவல் ஒன்று சமூகவலைத்தளத்தில் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 


 
இயக்குனர் சுசீந்திரன் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார்.அதில்,``40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தி உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும், தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீதம் சரியான தருணம். வா தலைவா மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காகக் காத்திருக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

webdunia
இந்த நிலையில் சுசீந்திரனின் இந்த பதிவிற்கு ரீ ட்வீட் செய்திருந்த டி ராஜேந்திரனின் இளைய மகன் குறளரசனின் ``எங்க அப்பாதான்யா அடுத்த முதல்வர்’’ என்று பதிவிட்டிருந்தார். இதனைக்கண்ட அஜித் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகி  சிம்பு தம்பி குறளரசனை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தனர். 
 
ஆனால் இந்த ட்விட்டர் கணக்கின் பெயர் குரல் அரசன் என்கிற பெயருக்கு பதிலாக குரான் அரசன் என உள்ளதால் இது போலி ட்விட்டர் கணக்காக இருக்கலாம் என சந்தேகிக்கபட்டது. தற்போது இது போலி கணக்கு தான் என்று Kural Tr என்பதுதான் குறளரசனின் உண்மையான  ஃபேஸ்புக் கணக்கு என்றும் சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கூட்டணிக்கு வேட்பாளருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு !