Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TV ரிமோட் ரெடியா வச்சுக்கோங்க... பிக்பாஸ் 4 ஒளிபரப்பாகும் நாள் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (13:03 IST)
முதன் முதலாக இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் தமிழ், தெலுங்கு , மராத்தி, கன்னடா என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு இந்தியா முழுக்க பரவி வருகிறது. அந்தவகையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் NTR , நாணி , நாகார்ஜூனா என்ற முதல் மூன்று சீசனை வெவ்வேறு பிரபலங்கள் தொகுத்து வழங்கினர்.

இந்நிலையில் தற்ப்போது தமிழை போலவே அங்கும் 4 பிக்பாஸ் சீசனுகாகன் வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த முறை தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார்.  சமீப நாட்களாக ஷூட்டிங் வீடியோ உள்ளிட்டவை வெளியாகி தெலுங்கி ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சற்றுமுன் இந்த புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வருகிற செப்டம்பர் 6ம் தேதி முதல் StarMaa தொலைக்காட்சியில் பிக்பாஸ் 4 ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். முன் எப்பொழுதும் போல் இல்லாத வித்யாசமான பொழுதுபோக்கை காண உங்களது ரிமோட்டை ரெடியாக வைத்திருந்துங்க என கேப்ஷன் கொடுத்து ஆவலை துண்டியுள்ளனர். இதே போல் தமிழிலும் நேற்று கமல் ஹாசன் பிக்பாஸ் 4 ப்ரோமோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் ஒரு படம்… உறுதியளித்த அஜித்!

ஹபீபி படத்தில் ஏ ஐ தொழில்நுட்பம மூலமாக மறைந்த பாடகர் நாகூர் ஹனிபாவின் குரலில் ஒரு பாட்டு!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் ‘டைட்டில்’ அறிவிப்பு… மீண்டும் ஒரு பேய்ப் படமா?

அடுத்த கட்டுரையில்
Show comments