தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.
பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவினால் வருமானம் இழந்து பதிப்பட்ட திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு உதவிகள் வழங்கினார்.
இந்நிலையில் நேற்று தனது இன்று தனது 43வது பிறந்தநாள் கொண்டாடிய சூரிக்கு இயக்குனர் பாண்டிராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது தனது மகன் மற்றும் மகள் கேக் வெட்டியதை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த கேக்கில் கேக் செலவு-1500, பெட்ரோல் செலவு - 500 , டெக்ரேஷன் செலவு - 2000 மொத்தம் -4000 மொதல்ல காசு குடுத்துட்டு அப்றோம் கேக் வெட்டு என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்கு சூரி, 400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.