Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் என்ன செய்கிறது?

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் என்ன செய்கிறது?
, திங்கள், 3 ஜனவரி 2022 (14:31 IST)
ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்த கணம்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, தன் ராக்கெட்டிலிருந்து வெளி வந்து, பிரபஞ்சத்தில் முதலில் மின்னத் தொடங்கிய நட்சத்திரங்களைப் படம் பிடிக்கும் தன் பயணத்தைத் தொடங்கிய தருணம்.

இந்தக் காணொளி டிசம்பர் 25 அன்று, சில மணித்துளி தாமத்ததோடு பூமிக்கு பகிரப்பட்டது. ஆனால் காணொளியின் சமிக்ஞை சரிவர கிடைக்கவில்லை.

ஐரோப்பிய விண்வெளி முகமை அக்காணொளியை சரி செய்து, அதனோடு பிரிட்டனைச் சேர்ந்த சார்லொட் ஹதெர்லேவின் இசையைச் சேர்ந்து வெளியிட்டுள்ளது.

இதுதான் நாம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைக் காணும் கடைசி காட்சி. இத்தொலைநோக்கி பிரபஞ்சத்தைக் குறித்தும், அங்கு தொலை தூரத்தில் இருக்கு நட்சத்திரங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களைக் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அப்சர்விங் பொசிஷன் என்றழைக்கப்படும் கண்காணிக்கும் நிலைக்குச் செல்கிறது. அது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் அந்த இடத்தில் தொலைநோக்கி நிலை பெற வேண்டும். ஏற்கனவே இதுநிலவின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 25 அன்று ஏரியன் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானாவில் இருந்து மிக துல்லியமாக ஏவப்பட்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

இந்த ஐரோப்பிய ராக்கெட் சரியாக இயங்கியது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை சரியான உயரத்திலும், பூமத்திய ரேகையை ஒட்டிய கச்சிதமான சாய்விலும், சரியான வேகத்திலும் பயணிக்க உதவியது.

தொலைநோக்கியை விண்ணுக்கு கொண்டு செல்லும் ராக்கெட்டின் பயணம் செயல்பாடு சிறப்பாக இருந்தது. பயணப் பாதையை சரி செய்து கொள்ளும் போது தொலைநோக்கியின் எரிபொருள் அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவை எழாததால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் வாழ்நாள் கணிசமாக நீட்டிக்கப்படலாம் என திட்ட கட்டுப்பாட்டுக் குழுவினர் நம்புகின்றனர்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சோலார் அடுக்குகள் விரிந்த வேகத்தை காணொளியில் பார்க்க முடிந்தது. ராக்கெட்டின் மேலடுக்கில் இருந்து தொலைநோக்கி வெளியேற்றப்பட்ட பிறகு வெறும் 70 நொடிகளுக்குள் சோலார் அடுக்குகள் வெளி வந்தன.

சோலார் அடுக்குகள் வெளி வரும் நிகழ்வு பல நிமிடங்களுக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பாதுகாப்பாக களமிறக்கப்படத் தேவையான சூழல் இருப்பதை உறுதி செய்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கணினிகள், சோலார் அடுக்கு உடனடியாக விரிய கட்டளையிட்டது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மடித்து வைக்கப்பட்ட நிலையில், மிக நெருக்கமாக 10.7 மீட்டர் நீளத்துக்கு 4.5 மீட்டர் அகலம் மற்றும் 4.5 மீட்டர் உயர பெட்டியில் பத்திரமாக அடைக்கப்பட்டது. தற்போது தன்னைத் தானே முழுமையாக விரித்துக் கொள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு வழிகாட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக, மிகுந்த சிக்கலான மிகப்பெரிய சூரிய கேடயம் முழுமையாக விரிய அடுத்த சில நாட்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

ராக்கெட்டில் இருந்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனியாக பிரிந்து செல்லும் காணொளியைப் படம் பிடித்த கேமரா அமைப்பை, அயர்லாந்தைச் சேர்ந்த ரியால்ட்ரா ஸ்பேஸ் சிஸ்டம் என்ஜினியரிங் என்கிற நிறுவனமே வடிவமைத்தது.

பிரெஞ்சு கயானாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஏவுதலை நிர்வகிக்கும் ஏரியன்ஸ்பேஸ், ரியால்ட்ரா தொழில்நுட்பத்தை ஐரோப்பாவின் அடுத்த தலைமுறை ஏரியன் வாகனமான ஏரியன் 6-ல் பயன்படுத்த உள்ளது.

சார்லொட் ஹதெர்லே முன்பு ஐரோப்பிய விண்வெளி மையத்தில் பணியாற்றினார். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடலின் பெயர் லோன்லி வால்ட்ஸ். இப்பாடல் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'டுரூ லவ்' என்கிற ஆல்பத்தில் இடம் பெற்றிருந்தது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியதா?