Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாட்டு கேட்டு காதலிக்கும் பெண் குருவி, இசையிழந்து அழியும் குருவி இனம்

Advertiesment
பாட்டு கேட்டு காதலிக்கும் பெண் குருவி, இசையிழந்து அழியும் குருவி இனம்
, வியாழன், 18 மார்ச் 2021 (15:40 IST)
ரிஜென்ட் ஹனி ஈட்டர் என்கிற அரிதான பாட்டு பாடும் குருவி இனம், மிகவும் பயந்து, தன் பாட்டையே மறக்கத் தொடங்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
தென் கிழக்கு ஆஸ்திரேலிய பகுதியில் ஒரு காலத்தில் அதிகமாக இருந்த ரிஜென்ட் ஹனி ஈட்டர் என்கிற குருவி இனம், தற்போது அருகி வரும் இனங்களின் கீழ் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. தற்போது வெறுமனே 300 பறவைகள் மட்டுமே உலகில் இருக்கின்றன.
 
"இந்த ரிஜென்ட் ஹனி ஈட்டர் பறவை மற்ற பறவைகளோடு சுற்றித் திரிந்து, இவ்வினக் குருவிகள் பாடும் பாட்டை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை" என விளக்குகிறார் முனைவர் ராஸ் க்ரேட்ஸ்.
 
அவரது கண்டுபிடிப்புகள் பிரிட்டனின் ராயல் சொசைட்டி சஞ்ஜிகையில் பிரசுரமாகியுள்ளன.
 
ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ராவில் இருக்கும் தேசிய பல்கலைக்கழகத்தில் இருக்கும் `டிஃபிகல்ட் பேர்ட் ரிசர்ச்` என்கிற குழுவில் உறுப்பினராக இருக்கும் முனைவர் க்ரேட்ஸ், இந்த இன குருவிகளின் பாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் இருக்கிறார். அந்த இனக் குருவிகளைப் பிடித்து அதன் பாட்டைக் கற்றுக் கொடுக்கிறார் முனைவர் க்ரேட்ஸ்.
 
பெருமுயற்சி
ஆராய்ச்சியாளர்கள், ரிஜென்ட் ஹனி ஈட்டர் குருவியின் பாட்டைப் படிக்கத் தொடங்கவில்லை, ஆனால் அந்த இனப் குருவிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர்.
 
"ரிஜென்ட் ஹனி ஈட்டர் இன குருவிகள் மிகவும் அரிதானவை. அக்குருவிகள் வசிக்கும் இடம் பிரிட்டனை விட 10 மடங்கு பெரியது" என்கிறார் முனைவர் க்ரேட்ஸ்.
 
இந்த கவனமான கடின உழைப்பைக் கோரும் தேடலில், அவ்வினக் குருவிகள் வேறு ஏதோ பாடல்களை பாடுவதை கவனித்தார்.
 
"அக்குருவிகள் பாடும் பாட்டு ரிஜென்ட் ஹனி ஈட்டர் ரக குருவிகளைப் போன்று இல்லை. அக்குருவிகள் வேறு ஏதோ ஓர் இத்தைப் போலப் பாடின" என நினைவுகூர்கிறார் க்ரேட்ஸ்.
 
மனிதர்கள் பேசிப் பழகுவதைப் போலத் தான் பாடல்களைப் பாடும் பறவைகள் தங்களின் பாடல்களைக் கற்கின்றன.
 
"பறவைகள் தங்கள் கூட்டை விட்டு வெளியேறிய பின், அவை, மற்ற வயது முதிர்ந்த ஆண் குருவிகளோடு பழக வேண்டும். அப்போது தான் அக்குருவிகளால், ஆண் குருவியின் பாடல்களைக் கவனித்து காலப் போக்கில் மீண்டும் பாட முடியும்" என்றார் க்ரேட்ஸ்.
 
ரிஜென்ட் ஹனி ஈட்டர் இனம், தங்களின் 90 சதவீத வாழ்விடத்தை இழந்து விட்டன. தற்போது அவ்வினக் குருவிகள், மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிதறிக் கிடக்கின்றன. எனவே இளம் வயது குருவிகளால், வயது முதிர்ந்த குருவிகளைக் கண்டுபிடித்து அதன் பாட்டைக் கேட்க முடியவில்லை.
 
"எனவே இவ்வினத்தின் இளம் பறவைகள் மற்ற இனத்தின் பாடல்களைக் கற்கின்றன" என விளக்குகிறார் க்ரேட்ஸ்.
 
இக்குருவி இனத்தின் 12 சதவீத பறவைகளிடம், அவ்வினத்தின் இயற்கையான பாடல் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது என ஆராய்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறது.
 
பாட்டு பாட பயிற்சி
ரிஜென்ட் ஹனி ஈட்டர் இன பறவையின் குரல் பதிவுகளை சேகரித்து வைத்திருக்கும் ரிஜென்ட், அவற்றை ஹனி ஈட்டர் பறவைகளுக்கு பயிற்றுவிக்கப் பயன்படுத்துகிறார்கள் விஞ்ஞானிகள்.
 
இவ்வினக் குருவியின் எண்ணிக்கையை அதிகரிக்க, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பிடித்து வைக்கப்பட்டு கூண்டில் வளர்க்கப்பட்ட ஹனி ஈட்டரை வெளியேவிடும் திட்டமும் இருக்கிறது.
 
"ஆண் குருவிகள் வேறு ஏதோ பாடலைப் பாடினால், பெண் குருவிகள் அதனோடு உடலுறவு கொள்ளாது" எனவும் விளக்குகிறார் முனைவர் க்ரேட்ஸ். "எனவே அவ்வினக் குருவிகள் எப்படிப் பாட வேண்டும் என்பதைக் கேட்டால், அக்குருவிகள் தானே பாடக் கற்றுக் கொள்ளும்"
 
உயிரினங்களைக் காக்க முயற்சிக்கும் போது, பறவைகள் பாடுவது போன்ற கலாசார குணநலன்களையும், அதன் இயற்கையான நடத்தைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்துமே விலங்கினங்கள் காட்டில் வளர மிகவும் அவசியமானவை என விஞ்ஞானிகள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் வேட்பாளர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் ஸ்டாலின்!