Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கோவில் சொத்துகள் மீட்பு

தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கோவில் சொத்துகள் மீட்பு
, புதன், 29 செப்டம்பர் 2021 (15:01 IST)
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய கோவில் நிலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல். 

 
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த 49 கிரவுண்ட் நிலத்தை இன்று இந்து சமய அறநிலையத் துறை சுவாதீனம் எடுத்தது. 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த இந்த இடத்திற்கான வாடகை செலுத்தப்படாலேயே இருந்தது.குத்தகைக்கு எடுத்திருந்தவர் இறந்துவிட்ட நிலையில், அவரது வாரிசுகள் அந்த இடத்தை தபால் நிலையம் ஒன்றுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். 
 
ஆனால், அறநிலையத் துறைக்குச் செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்தவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் மூலம் அந்த இடம் இன்று சுவாதீனம் பெறப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய் இருக்குமென அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
 
"காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமாக 160 கிரவுண்டுகளுக்கு மேல் நிலம் இருக்கிறது. ஏற்கனவே தனியார் ட்ரஸ்ட் நடத்திக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்தை ஸ்வாதீனம் செய்திருக்கிறோம். அவர்களும் கோடிக் கணக்கில் பாக்கி வைத்திருந்த நிலையில், அவர்கள் பயன்படுத்தியமைதானம் ஸ்வாதீனம் செய்யப்பட்டது. இரண்டும் சேர்த்து 50 கிரவுண்ட் இருக்கும். இன்று 49 கிரவுண்ட் ஸ்வாதீனம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 60 கிரவுண்டை வெகு விரைவில் இந்து சமய அறநிலையத் துறைக் கைப்பற்றும்.இன்று சுவாதீனம் செய்யப்பட்டது மட்டும் 300 கோடி ரூபாய்இருக்கும்" என சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
 
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இடத்தில் ஒரு மிகப் பழமையான கட்டடம் ஒன்று இருக்கிறது. அந்தக் கட்டடத்தின் தொன்மை மாறாமல் புதுப்பித்து வேறு பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியுமா என்பது குறித்து ஆய்வுசெய்யும் பணியில் தனியாார் அமைப்பு ஈடுபட்டுள்ளது.
 
"கடந்த சில நாட்களில் மதுரவாயில், மைலாப்பூர், திருப்போரூர் போன்ற இடங்களில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகளை மீட்டிருக்கிறோம். இன்னும் பல நூறு கோடி சொத்துகளை மீட்போம்." என சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவாரூரில் பொது இடங்களில் மது அருந்த தடை! – மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!