Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை: மருத்துவர்கள் கதறல்

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (13:50 IST)
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான சூழலில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
 
சிகிச்சை அளிப்பது அல்லது உயிரிழக்க அனுமதிப்பது இந்த இரண்டில் ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இத்தாலி தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் இத்தாலியில் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இத்தாலியில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ள நிலையில் 28,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோல, மருத்துவ ஊழியர்கள் இந்த பேரழிவுக் காலத்தில் பணிபுரியும்போது பல கடுமையான சோதனைகளை எதிர்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் மனதளவில் வலிமையை இழந்து அழுது விடுகின்றனர் என்று டாக்டர் சளரொளி கூறுகிறார். 
 
தலைமை பொறுப்பில் உள்ள மருத்துவரில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு மருத்துவராக பொறுப்பேற்றவர் வரை அனைவருக்குமே ஒரே விதமான மன அழுத்தம்தான். 30 வருடம் செவிலியராகப் பணியாற்றிய ஒருவர் கூட கதறி அழுததை பார்த்ததாக மருத்துவர் சளரொளி கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments