Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பதினொரு நாடுகள் வழியாக முறைகேடாக அமெரிக்காவிற்குள் நுழைந்த இந்தியர்

பதினொரு நாடுகள் வழியாக முறைகேடாக அமெரிக்காவிற்குள் நுழைந்த இந்தியர்
, செவ்வாய், 22 மே 2018 (12:56 IST)
காம்ரேட் இன் அமெரிக்கா (சிஐஏ). இது துல்கர் சல்மான் நடித்த மலையாள படம். இப்படத்தில் தன் காதலியை பார்ப்பதற்காக முறைகேடாக மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் நுழைய முயற்சிப்பார் துல்கர். இதே வழியில் அமெரிக்காவிற்கு சென்று, போலீஸில் சிக்கி இருக்கிறார் பஞ்சாபி ஒருவர். இவர் அமெரிக்காவுக்கு முறைகேடாக சென்றது காதலியை தேடி அல்ல, தன் வாழ்வாதாரத்தை தேடி.
 
பதினொரு நாடு பயணம்
 
பஞ்சாபில் உள்ள கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்பிரீத் சிங். ஒரு பயண முகவரின் துணைவுடன் ஹர்பிரீத் முறைகேடாக 11 நாடுகள் பயணித்து அமெரிக்கா சென்று இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் ஒரு அங்காடியில் 15 மாதங்கள் வரை பணி புரிந்து இருக்கிறார் என்கிறது போலீஸ். அவர் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். தனது நிஜ பாஸ்போர்ட்டை கொண்டு பிரேசில் பயணித்துள்ளார்
 
பின் அங்கிருந்து ஜெலந்தரில் உள்ள தனது முகவர் துணைவுடன் தரை மார்க்கமாக பொலிவியா பயணித்துள்ளார். பின் பேருந்து வழியாக லிமா, ஈட்வேடார், கொலம்பியா, பனாமா, கோஸ்டா ரைஸா, ஹோண்டுராஸ், கெளதமாலா மற்றும் மெக்சிகோ பயணித்து அங்கிருந்து லூசியானா வழியாக அமெரிக்கா நுழைந்து இருக்கிறார் என்கிறது போலீஸின் முதல் தகவல் அறிக்கை.
 
பிபிசியிடம் பேசிய போலீஸ் துணை ஆணையர் (இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்) சஞ்சய் பாட்டியா, "ஹர்பிரீத் சிங் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவரை விசாரித்து வருகிறோம்." என்றார்.
 
கழுதை விமானங்கள்
 
பஞ்சாபில் உள்ள டோஅபா பகுதியை சேர்ந்தவர் ஹர்பிரீத். அந்த பகுதியில் உள்ள பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு சென்று குடியேற விரும்புவார்கள். இந்த பகுதியில் கழுதை விமானம் என்ற பதம் மிகவும் பிரபலம். அதாவது முறைகேடாக பின் கதவு வழியாக ஒரு நாட்டிற்கு செலவது `கழுதை விமானங்கள்' என்று அழைக்கிறார்கள்.
 
அதாவது நேரடியாக ஒரு நாட்டிற்குள் செல்லாமல், வேறொரு நாடு வழியாக ஒரு நாட்டிற்குள் நுழைவதை இந்த பதம் வைத்து அழைக்கிறார்கள். இதற்காக பெரும்பாலும் அவர்கள் போலியான ஆவணங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பஞ்சாப் காவல் துறை ஆய்வாளர் ஒருவரின் மகன் இது போன்ற முயற்சியில் இறந்ததாக கூறுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - போட்டுத்தள்ளிய விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர்