கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை:
குழந்தை பிறப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு பிரேசிலிய தீவில், கடந்த 12 ஆண்டுகளில் தற்போது முதல் முறையாக பிறந்துள்ள புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிரேசிலின் நட்டால் நகரத்திலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, 3,000 மக்கள் மட்டுமே வசிக்கும் கடற்கரைக்கு பெயர்போன இந்த தீவில் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஒபாமா நிர்வாகம் மீது டிரம்ப் சந்தேகம்:
தனது தேர்தல் பிரசாரத்தில் அரசியல் நோக்கங்களுக்காக ஊடுருவல் நடத்தப்பட்டதா என்பது குறித்த விசாரணைக்கு கோரிக்கை விடுக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
ஒபாமாவின் நிர்வாகம் இது தொடர்பான நடவடிக்கையை எடுப்பதற்கு உத்தரவிட்டதா என்பது குறித்து தான் அறிய விரும்புவதாக ட்விட்டர் பதிவொன்றில் அவர் கூறிள்ளார்.