Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா Vs சீனா: நரேந்திர மோதி அரசு - எல்லை பதற்றம் பற்றிய சீன ஆய்வு என்ன கூறுகிறது?

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (23:55 IST)
நரேந்திர மோதி அரசுக்கு வலுவில்லையா? சீன நாளிதழ் ஆய்வு வெளியிடும் தகவல்கள்பட மூலாதாரம்,
 
சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக கருதப்படும் "குளோபல் டைம்ஸ்" நடத்திய பொதுமக்கள் ஆய்வில் இந்தியா, சீனா இடையிலான உறவுகள், இரு தரப்பு பதற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கு மக்கள் அளித்துள்ள கருத்துகள் அடிப்படையில் ஆய்வு விவரம் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சீனாவின் 10 பெருநகரங்களில் சுமார் 2,000 பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளதாக அந்த நாளிதழ் கூறுகிறது.
 
இந்தியாவின் செல்வாக்கு, சமீபத்திய எல்லை பதற்றங்கள், உள்நாட்டில் புறக்கணிக்கப்படும் சீன பொருட்கள், இரு தரப்பு உறவில் அமெரிக்க தலையீடு போன்ற கேள்விகளின் ஆய்வுத்தரவுகளை அந்த நாளிதழ் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
 
சீன கன்டெம்பரரி இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் என்ற அமைப்புடன் சேர்ந்து குளோல் டைம்ஸ் இந்த ஆய்வை நடத்தியிருப்பதாக கூறியுள்ளது.
 
அதில் இந்த ஆய்வு ஆகஸ்ட் 17 முதல் 20ஆம் தேதி வரையில் பெய்ஜிங், வூஹான், ஷாங்காய் உள்ளிட்ட 10 பெரு நகரங்களில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
 
இந்தியாவுக்கு எதிரான சீனாவின் ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி 90% பேர் கருத்து வெளியிட்டதாகவும், 50% பேர் மோதி அரசின் அணுகுமுறையை விரும்பியதாகவும் கூறப்பட்டு்ள்ளது.
 
நரேந்திர மோதி அரசுக்கு வலுவில்லையா? சீன நாளிதழ் ஆய்வு வெளியிடும் தகவல்கள்பட மூலாதாரம்,
 
இன்று வியாழக்கிழமை பிற்பகல்வரை மோதி அரசை விரும்பும் சீனர்கள் என்ற வகையில் அந்த நாளிதழின் இணையதள முகப்புப்பக்க செய்தித் தலைப்பு அமைந்திருந்தது. ஆனால், அந்த தலைப்பு நாளின் பிற்பகுதியில் மாற்றப்பட்டு, சீன ராணுவத்தை அச்சுறுத்த இந்தியாவால் இயலவில்லை-ஆய்வுத்தகவல் என்று குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
 
இருப்பினும், மோதியை ஆதரிக்கும் 50% என்ற டிவிட்டர் பக்க இணைப்பு தொடர்ந்து அந்த இணையதள பக்கத்தில் உள்ளது.
 
Twitter பதிவை கடந்து செல்ல, 1
 
Twitter பதிவின் முடிவு, 1
இது மட்டுமின்றி, சீனா மீதும் அதன் கடந்த கால நடவடிக்கைகள் மீதும் இந்தியா விரோத போக்கை கொண்டிருப்பதாக 70% மக்கள் கருதுவதாக அந்த நாளிதழ் ஆய்வு தெரிவித்துள்ளது.
 
நரேந்திர மோதி அரசுக்கு வலுவில்லையா? சீன நாளிதழ் ஆய்வு வெளியிடும் தகவல்கள்பட மூலாதாரம்,
 
ஆய்வில் இடம்பெறும் பிற தகவல்கள்
எதிர்காலத்தில் இந்தியா சீனாவை தூண்டிவிட்டு, அதனால் எல்லையில் பதற்றங்கள் அதிகரிக்குமானால், அதற்கு சீனா பதிலடி கொடுப்பது சரியானதாக இருக்கும் என ஆய்வில் பங்கேற்ற 90% பேர் நம்புவதாக கூறப்பட்டுள்ளது.
 
ஆனால் சுமார் 26% பேர், இந்தியாவை ஒரு நல்ல அண்டை நாடாகவே பார்க்கிறார்கள் என்றும் அவர்கள், தென்கொரியாவை விட ரஷ்யா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் இந்தியாவை 'மிகவும் பிடித்த தேசத்தில்' நான்காவது இடத்தில் வைத்துள்ளார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த ஆய்வில் 56 சதவீத மக்கள் சீனாவில் இந்தியாவைப் பற்றி நல்ல அறிவைக் கொண்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 56% பேர், இந்தியாவை பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சீனா Vs இந்தியா: `ராணுவ நடவடிக்கை வாய்ப்பு பற்றி நீங்கள் அறிய வேண்டியவை
இந்தியா - சீனா: எல்லையில் பலசாலியாகப் போட்டியிடுவது ஏன்?
எல்லையில் ராணுவ வீரர்கள் - சீனாவின் ஆலோசனையை நிராகரித்த இந்தியா
இந்த ஆய்வுத்தரவுகள், சிஐசிஐஆர் இயக்குநரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இது குறித்து அவர் பேசுகையில், இரு நாடுகளிலும் மக்களும், மக்களும் நல்ல தொடர்புகளை வைத்திருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.
 
மக்கள் கவலைப்படவில்லையா?
எனினும், இந்தியா, சீனா இடையிலான எல்லை பதற்றங்கள், இரு தரப்பு பொதுமக்கள் இடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என ஆய்வு நிறுவனம் கருதுகிறது. மேலும், சீனாவில் வாழும் மக்கள், இந்தியாவை விட அமெரிக்கா, ஐரோப்பா பற்றியும் அதிகம் அறிந்திருப்பதைய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்த ஆய்வில், இந்தியாவை பற்றிய முதல் பார்வையாக என்ன தோன்றுகிறது என்றும் கேட்கப்பட்டுள்ளது.
 
அதற்கு சுமார் 31% பேர், 'இந்திய சமுதாயத்தில் பெண்களுக்கு இருக்கும் குறைவான சமூக நிலை' நினைவுக்கு வருகிறது' என்ற பதிலை தெரிவித்துள்ளனர். 28% பேர், "உலக மக்கள்தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது" என்றும், சுமார் 22% பேர், இந்தியாவை பற்றி கேட்டால், முதலில் 'இந்திய யோகா' நினைவுக்கு வருவதாக கூறியதாக ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்தியா சீனா உறவுகள்
இந்த ஆண்டு மே முதல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான லடாக் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. கடந்த ஜூன் 15-16 தேதிகளில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அசல் எல்லை கோடு பகுதியே அருகே இரு தரப்பிலும் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உட்பட 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 
அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பதற்றத்துடனேயே உள்ளது. எல்லையில் பதற்றத்தை குறைக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால் இப்போதுவரை அது பலன் கொடுக்கவில்லை.
 
இந்தியா சீனா உறவுகள்பட மூலாதாரம்,GETTY IMAGES
தற்போதைய குளோபல் டைம்ஸ் ஆய்வு, அந்த பதற்றத்துக்குப் பிந்தைய இரு நாட்டு உறவுகள் தொடர்பான கேள்விகளை மக்களிடையே எழுப்பியிருக்கிறது. இந்தியாவில் சீனாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில், உள்நாட்டில் 50க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பல்வேறு அரசுத்துறை ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்காத வகையில் விதிகள் கடுமையாக்கப்பட்டன. இந்த இரு நாட்டு உறவுகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் கூட அவை மோசம் அடைந்து வருவதை உணர்வதாக கூறுகிறார்கள்.
 
இருந்தபோதும், அந்த உறவு எதிர்காலத்தில் மேம்படலாம் என குளேபல் டைம்ஸ் ஆய்வில் சுமார் 25% பேர் கருதுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் ராணுவ பலம், சீனாவுக்கு ஒருவகை ஆபத்தாகலாம் என 57% பேர் கருகிறார்கள் என்பதும் அந்த ஆய்வில் பதிவாகியுள்ளது.
 
இரு தரப்பு வரலாறைப் பார்த்தாலும், ​​1962ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு போர் நடந்தது. அதில் சீனா வென்றது. அதன் பின்னர், 1965 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்தன. கடைசியாக கடந்த. ஜூன் மாதத்தில் இரு நாடுகளின் படைகளுக்கு இடையே நடந்த மோதல், ரத்தக்களரியாகி பதற்றத்தின் உச்சத்துக்கே சென்றது.
 
சீன சரக்குகள் புறக்கணிப்பு
சீனாவுடனான இந்த மோதலில் இந்தியாவில் எதிர்கட்சிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தபோதும், மோதல் தொடர்பான ஒரு தகவல் கூட அதிகாரப்பூர்வமற்ற வகையில் சீனாவில் இருந்து வெளிவரவில்லை.
 
நரேந்திர மோதி அரசுக்கு வலுவில்லையா? சீன நாளிதழ் ஆய்வு வெளியிடும் தகவல்கள்பட மூலாதாரம்,TWITTER/ANURAGTHAKUR
சமீபத்தில், கொரோனா வைரஸ் பரவலின் தீவிரமான கட்டத்தில், சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, "வோக்கல் ஃபார் லோக்கல்" என முழக்கமிட்டார். அது சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கையுடன் இணைத்துப் பார்க்கப்பட்டது. இந்தியாவில், சீன பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரமாக அந்த முழக்கம் கருதப்படுகிறது.
 
இந்த ஆய்வில் சீனா-இந்தியா வர்த்தகம் மற்றும் அவை தொடர்புடைய கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், சீனாவில் 35% பேர் இதைப் பற்றி வருத்தப்படுகிறார்கள் என்றும் சீனாவும் இந்தியாவை அதே வழியில் நடத்த வேண்டும் என்றும் நம்புகிறார்கள். இந்தியா பொருளாதார ரீதியாக சீனாவை சார்ந்துள்ளது என்று 50% பேர் கருதுவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், 57.1% பேர், சீனாவுக்கு இந்தியா ராணுவ அச்சுறுத்தலாக இருக்கும் என நம்பவில்லை என கூறியுள்ளதாகவும் குளோபல் டைம்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சீனாவின் மக்கள்தொகையைப் பொருத்தவரை, குளோபல் டைம்ஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனாலும், இந்தியா-சீனா எல்லை பதற்றம் நிலவும் இந்தச்சூழலில், இந்த ஆய்வு முக்கியமானதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி நகரில் மெட்ரோ பணியின் போது விபரீதம்.. வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்ததால் பரபரப்பு..!

திமுகவும், நக்சல்களும் சேர்ந்து எடுத்த பயங்கரவாத படம் ‘விடுதலை 2’?? - அர்ஜுன் சம்பந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஒரு வார மோசமான சரிவுக்கு பின் ஏற்றத்தை நோக்கி பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு விநியோகம் எப்போது? கூடுதல் தலைமை செயலாளர்

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments