Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"வாழ்வதற்கான வழியை ஆடுகள் காட்டின" - வாட்ஸ்-அப்பில் ஆடு விற்று லட்சங்களில் சம்பாதித்த விவசாயி

Advertiesment
BBC
, ஞாயிறு, 26 மார்ச் 2023 (16:34 IST)
“நான் வாழ்வதற்கான வழியை ஆடுகள்தான் காட்டின. ஆடு வளர்ப்பால், 10 முதல் 12 லட்சம் மதிப்புள்ள வீடு கிடைத்தது, கார் கிடைத்தது. என் வாழ்க்கையில் நடப்பது எல்லாமே ஆடு வளர்ப்பு மூலம்தான் நடக்கிறது,” என்று கையில் அழகிய ஆட்டுக்குட்டியை ஏந்தியபடி ரவி ஹிரசிங் ராஜ்புத் கூறுகிறார்.

மகாராஷ்டிராவின் ஔரங்காபாத்தில் உள்ள புலும்ப்ரி தாலுகாவின் பால் கிராமத்தில் ரவி வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளாக அவர் ஆடு மேய்த்து வருகிறார்.

மராத்வாடா பகுதியில் வசிக்கும் மற்ற விவசாயிகளைப் போன்று ரவியும் சிறிய அளவில் விவசாயம் செய்து வருகிறார். அவர்களிடம் ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. 1.5 ஏக்கர் பண்ணையாக இருந்தாலும் 8 பேருக்கு உணவளிக்க வேண்டியிருந்ததால் ரவி விவசாயம் தொடர்பான தொழிலுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

ரவி 2011ஆம் ஆண்டை அன்புடன் நினைவுக்கூர்கிறார்.

தேவையில் இருந்து தொடங்கிய ஆரம்பம்

“2011ஆம் ஆண்டில் இருந்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறேன். அந்த நேரத்தில், மராத்வாடா பகுதியில் அதிகளவில் பஞ்சம் ஏற்படும். 8 பேர் அடங்கிய எங்கள் குடும்பத்தினருக்கு ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் போதுமானதாக இல்லை என்பதால் விவசாயம் பார்த்துகொண்டே ஆடு மேய்ப்பதில் ஈடுபட்டேன்,” என்று ரவி கூறினார்.

ஒரேயொரு ஆட்டை வைத்துத் தனது மேய்ச்சல் தொழிலைத் தொடங்கினார். ஆந்த ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது. இதையடுத்து ரவியின் நம்பிக்கை அதிகரித்தது. பின்னர் வரும் வருமானத்தில் ஆடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். 2011இல் இருந்து 2015க்குள் அவரிடம் 25 ஆடுகள் இருந்தன.

இதற்கிடையில், 2015இல், படேகானில் உள்ள ஆடு-செம்மறி ஆடு வளர்ச்சிக் கழகத்தில், ஆடு வளர்ப்புப் பயிற்சியை ரவி பெற்றார். மேலும் 2 தனியார் இடங்களில் அவருக்கு ஆடு வளர்ப்புப் பயிற்சி கிடைத்தது.

“ஆடுகளின் பல்வேறு வகைகள் பற்றிய அறிவு, தகவல், அறிவு ஆகியவற்றை அந்தப் பயிற்சி கற்றுத் தருகிறது,” என்கிறார் ரவி.

உள்ளூர் முதல் வெளிநாட்டு ஆடுகள் வரை

”2018 வரை சிரோஹி, சோஜாத், கோட்டா, பீட்டல் நாட்டு ஆடுகள் என்னிடம் இருந்தன. 2018க்கு பிறகு வெளிநாட்டில் இருந்து ஆப்ரிக்கன் பன்றி இன ஆடுகளை வாங்கினேன். ஆப்ரிக்கன் பன்றி இன ஆடுகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல இனச்சேர்க்கை விகிதம் உள்ளது. எப்போதாவதுதான் நோய்வாய்ப்படுகிறது. உடனடியாக எடை கூடி விடுகிறது. இந்த ஆடு பலன் தரும் என்பதால் பலராலும் வளர்க்கப்படுகிறது," என்கிறார் அவர்.

தற்போது, ரவி தனது பண்ணையில் 15 பெரிய அயல்நாட்டு ஆப்பிரிக்க பன்றி ஆடுகளையும் 15 சிறிய ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

ஆடு வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துப் பேசிய அவர், “ஒவ்வொரு ஆட்டுடனும் 2 குட்டிகள் என்ற விகிதத்தில் 15 ஆடுகளை நாம் வளர்த்து வந்தால், ஒரு ஆடு மூலம் ஆண்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். அந்த வகையில் நான் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கிறேன்,” என்றார்.

ஆடுகள் விற்பனைக்கு சமூக ஊடகங்களை அவர் அதிகளவில் பயன்படுத்துகிறார். ஆடு விற்பனை தொடர்பாக வாட்ஸ் அப் குழுக்கள், ஃபேஸ்புக் குழுக்கள் போன்றவற்றை அவர் உருவாக்கியுள்ளார். விற்பனைக்கு ஆடு வரும்போது அது தொடர்பான தகவல்களை அவர் குழுக்களில் பகிர்கிறார்.

“ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் விவசாயிகளாக உள்ளனர். சமூக ஊடகத்தில் ஆடு விற்பனை தொடர்பான வீடியோவை நாம் பதிவு செய்ததும் அவர்கள் வந்து என்னைத் தொடர்புகொண்டு, ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்,” என்று ரவி தெரிவிக்கிறார்.

தீவனமும் இருப்பிடமும்

ரவி தனது ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் 30 குலைகளில் தீவனம் பயிரிட்டுள்ளார்.

ரவி கூறும்போது, “ஒன்றரை ஏக்கரில் 5 கொத்து சிவரி, 5 கொத்து சுபபூல், 5 வெந்தயப் புல், 5 ஸ்மார்ட் நேப்பியர், கொஞ்சம் கோபி கிருஷ்ணா மற்றும் கொஞ்சம் தசரத் புல் என ஆடுகளுக்கு ஏற்ற சத்து நிறைந்த 7 வகையான தீவனங்கள் பயிரிடப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

ஆடு வளர்ப்பில் உத்தரவாதமான வருமானம் வேண்டுமானால், ஆடுகளின் ஆரோக்கியம், தீவன மேலாண்மை சரியாக இருக்க வேண்டும் என்பது ரவியின் கருத்து.

“தீவன திட்டமிடல், கொட்டகைத் திட்டமிடல் ஆகியவை ஆடு வளர்ப்பில் மிக முக்கியமான விஷயம். உங்கள் கொட்டகை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். புரதம் நிறைந்த தீவனம், உலர் தீவனம் போன்றவை ஆடுகளை ஆரோக்கியமாக வைக்கும் என்று ரவி கூறுகிறார்.

இதேபோல், "ஆடுகளுக்கு தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் போட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டியது முக்கியம். கால்சியம், கல்லீரல் டானிக், மினரல்கள் ஆகியவையும் மிக அவசியமானவை," என்று அவர் பட்டியலிடுகிறார்.

மேற்கூறிய முறையை சரியாகப் பின்பற்றினால், ஆடு வளர்ப்பு மூலம் உறுதியான வருமானத்தைப் பெற முடியும் என்று அவர் நம்புகிறார்.

"விவசாயத்திற்கு துணைத் தொழிலாக ஆடு வளர்ப்பு செய்யவேண்டும். தீவனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைத்தால் பண்ணையில் தீவனம் வழங்கலாம். அவற்றுக்கு தங்குமிடம் அமைக்க வேண்டும். அதன்பின் ஆடுகளை வாங்கியதற்குப் பின்னர் வயலில் கடுமையாக உழைத்து வளர்க்கவேண்டும். ஆடுகளை வளர்த்து அதன் பிறகு வருமானத்தை ஈட்டலாம்,” என்கிறார் ரவி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீழடி அருங்காட்சியகத்தில் இனி இலவச அனுமதி கிடையாது! – கட்டணம் அறிவிப்பு!