Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவை மீண்டும் தாக்கத் தொடங்கும் கொரோனா வைரஸ் - இரண்டாம் அலை ஆரம்பம்

Advertiesment
Coronavirus
, செவ்வாய், 16 ஜூன் 2020 (10:53 IST)
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பரவல் அந்த நகரின் மிகப் பெரிய மொத்த விற்பனை சந்தையான ஷின்ஃபடி சந்தையுடன் தொடர்புடையது என க்ளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. 79 பேருக்கு இங்கிருந்துதான் தொற்று பரவியது என க்ளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

சந்தைக்கு அருகில் இருக்கும் பள்ளிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தையில் வேலை செய்யும் 10,000 பேருக்கு சோதனை செய்யப்படும்.

லியோனிங், ஹெபெய் மற்றும் சிசுன் ஆகிய மூன்று மாகாணங்களில் தொற்று கண்டறியப்பட்ட, தொற்று இருக்குமோ என சந்தேகிக்கப்படும் நேர்வுகள் அனைத்தும் பெய்ஜிங்குடன் தொடர்புடையவையே.

பெய்ஜிங்கில் தொற்று பரவி வரும் நிலையில், உலகெங்கும் விமானப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் சீனா புதிய விமான போக்குவரத்து நிறுவனத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் தொடர்புடைய பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டு ஹைனான் தீவிற்கு புதிய விமான சேவை தொடங்கவுள்ளது. இந்த கூட்டணியில் சீன வலைத்தள பயண முகமையான டிரிப்.காம் என்ற நிறுவனமும் ஒன்று.

ஏற்கெனவே உள்ள விமான நிறுவனங்களே போராடும் இந்த வேளையில் புதிய விமான சேவை தொடங்குவது சரியா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 ஆயிரத்தை தாண்டிய தேனாம்பேட்டை: சென்னையில் கொரோனா நிலவரம்