Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிகுண்டு மிரட்டல் - லண்டனில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (21:35 IST)
ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டலால் லண்டன் ஸ்டன்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.
ஏஐ 191 விமானம் மும்பையிலிருந்து அமெரிக்காவில் உள்ள நியூவாக்கிற்கு சென்று கொண்டிருந்தது.
 
விமானம் தரையிறங்கிய சமயத்தில் பிரிட்டனின் ராயல் ஏர் போர்ஸ் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன என்று பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியது.
 
வெடிகுண்டு மிரட்டலால் விமானம் தரையிறக்கப்பட்டது என முதலில் ட்வீட் செய்த ஏர் இந்தியா பின்னர் அந்த ட்வீட்டை நீக்கியது. பிறகு இந்த சம்பவத்தை பாதுகாப்பு அச்சுறுத்தல் என கூறியது.
 
விமானம் லண்டன் நேரப்படி காலை 10.15 க்கு தரையிறக்கப்பட்டு பின்னர் விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தப்படாத பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. விமான நிலையத்தின் முக்கிய முனையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஸ்டன்ஸ்டெட் விமான நிலையம் கூறியுள்ளது.
 
அந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்று தகவல் இன்னும் தெரியவில்லை.
 
எஸ்ஸெக்ஸ்-இல் உள்ள விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் செல்லும்போது பாதுகாக்க லிங்கன்ஷையரில் இருந்து ராயல் ஏர் போர்ஸ்-இன் விமானங்கள் சென்றதாக ராயல் ஏர் போர்ஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
 
அந்த விமானங்கள் ஒலியைவிடவும் வேகமான 'சூப்பர் சோனிக்' வேகத்தில் பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளவை என்றும் அருகில் உள்ள டெர்ப்ஷையரில் அந்த அதிர்வலைகளால் பெரும் ஒலி (சோனிக் பூம்) கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments