அமமுகவின் இன்னொரு விக்கெட் விழுந்தது: ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர் யார்?

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (21:20 IST)
தினகரனின் அமமுகவில் செந்தில் பாலாஜியின் விக்கெட் முதல்முதலாக விழுந்த நிலையில் அக்கட்சியின் பிரமுகர்கள் மாற்றுக்கட்சியை தேடி சென்று கொண்டிருக்கின்றனர். அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நாளை திமுகவில் இணையவுள்ளதாக ஒரு செய்தி வெலீயாகியுள்ளது
 
இந்த நிலையில் அமமுகவின் செய்தி தொடர்பாளரான சசிரேகா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அவருடைய ஆதரவாளர்களும் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனையடுத்து அமமுகவின் இன்னொரு விக்கெட் விழுந்துள்ளது
 
இதேரீதியில் சென்று கொண்டிருந்தால் அமமுகவில் தினகரனையும் சசிகலாவையும் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள் போல் தெரிகிறது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதால் அவரை நம்பி வந்த பலர் பதவியையும் பணத்தையும் இழந்து இனிமேலும் தினகரன் கட்சியில் இருந்தால் அரசியல் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு மாற்று கட்சிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். மீதியிருக்கின்ற அமமுகவினர்களும் எந்த நேரத்திலும் மாற்றுக்கட்சிக்கு செல்லும் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments