பெட்ரோல் விநியோகிக்கும் பிரிட்டன் ராணுவம்

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (13:43 IST)
பிரிட்டனில் ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பெட்ரோல் பங்குகளில் போதிய அளவுக்கு எரிபொருள் இல்லை. 
 
எனவே மக்கள் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இப்பிரச்சனையை சரி செய்ய, பிரிட்டன் அரசு ராணுவத்தை களமிறக்கியுள்ளது.
 
திங்கட்கிழமை முதல் பிரிட்டன் ராணுவத்தினர் கராஜ்களுக்கு எரிபொருளை விநியோகிப்பர் என அரசு தரப்பு கூறியுள்ளது. எரிபொருள் விநியோகப் பிரச்சனையை எதிர்கொள்ளும் பணியில் சுமார் 200 ராணுவத்தினர் (அதில் 100 பேர் ஓட்டுநர்கள்) ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டிலிருந்து 300 எரிபொருள் டேங்கர் லாரி ஓட்டுநர்களை வரவழைத்து, அவர்கள் வரும் மார்ச் மாதம் வரை பணியாற்ற வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
 
பிரிட்டனில் 1,100 பெட்ரோல் நிரப்பும் பங்குகளிடம், பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய கருத்துக் கணிப்பில் 26 சதவீத பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் கையிருப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை நடிகராக பார்க்கவில்லை.. அவர் ஒரு மிகச்சிறந்த அரசியல் சக்தி.. பிரவீன் சக்கரவர்த்தி

மம்தா பானர்ஜிக்கு மனநல சிகிச்சை தேவை: பாஜக கிண்டல்..!

இதுக்கு தானே ஆசைப்பட்டாய் டிரம்ப்? வெனிசூவெலா நாட்டில் இருந்து எண்ணெய் வணிகத்தை தொடங்கிய அமெரிக்கா..!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்!.. விஜய் மாஸ்!.. அடுத்தடுத்து குண்டு வீசும் பிரவீன் சக்ரவர்த்தி...

தேமுதிக, பாமக, அமமுகவை சேர்க்க விஜய் மறுப்பா? ஓபிஎஸ்க்கும் கதவு திறக்கவில்லை.. காங்கிரசுக்கு மட்டும் வெயிட்டிங்?

அடுத்த கட்டுரையில்
Show comments