Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் கோயில் பூமி பூஜை … 1 லட்சம் லட்டுகள் வழங்க முடிவு !

ராமர் கோயில் பூமி பூஜை … 1 லட்சம் லட்டுகள் வழங்க முடிவு !
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (21:21 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக பலர் தங்கம், வெள்ளி போன்றவற்றையும் நன்கொடையாய் வழங்கி வருகின்றனர்.

 தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி பிரமர் மோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராமர் கோயில் பூஜைக்காக வரும் பக்தர்களுக்கு  ஒரு லட்சம் லட்டுகள் பாட்னா மகாவீர் அறக்கட்டளை  வழங்க செய்யவுள்ளது.

இதுகுறித்து அந்த அறக்கட்டளை அறங்காவலர் கிஷோர் பேசியுள்ளதாவது, ராமர் கோயில் பூஜைக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்து வருவதாகவும், இதில் 51, 000 லட்டுகள் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் எற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள லட்டுகள் பக்தர்கள் குழுமியுள்ள இடங்களில் வைத்து வழங்கவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொசுக்களை உற்பத்தி செய்தால் அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு