Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்காலத்தில் ராமர் கோவில் எப்படி இருக்கும்? – வெளியானது ஸ்பெஷல் படங்கள்!

Advertiesment
எதிர்காலத்தில் ராமர் கோவில் எப்படி இருக்கும்? – வெளியானது ஸ்பெஷல் படங்கள்!
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:11 IST)
நாளை அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில் எதிர்காலத்தில் ராமர் கோவில் எப்படியிருக்கும் என்ற எக்ஸ்க்ளூசிவ் படங்கள் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக பலர் தங்கம், வெள்ளி போன்றவற்றையும் நன்கொடையாய் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கி முழுவதுமாய் முடிவடைய மூன்றரை ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோவில் எப்படி இருக்கும் என்ற கிராபிக் புகைப்படங்களை ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு வெளியிட்டுள்ளது.

webdunia



webdunia
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு