Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதிடம்

கன்னி
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) அமைதியும், கருணையும் கொண்ட கன்னி ராசியினரே நீங்கள் அனைவரிடமும் நேசமுடன் பழகுவீர்கள். உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடைவீர்கள். இந்த ஆண்டு வீண் செலவுகள் குறையும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடந்தாலும் நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக் காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல் துறையினருக்கு மேலிடத்திற்கும் உங்களுக்கும் திடீர் இடைவெளி ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும். உத்திரம்: இந்த ஆண்டு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். ஹஸ்தம்: இந்த ஆண்டு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம். சித்திரை: இந்த ஆண்டு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும். பரிகாரம்: லட்சுமி வராஹப் பெருமாளை சேவித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

ஜனவரி-2020

(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில்....

பிப்ரவரி-2020

(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண, ருண ஸ்தானத்தில் புதன், சுக்ரன்....

மார்ச்-2020

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரகநிலை: சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ) - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில்....

ஏப்ரல்-2020

பலன்: விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசைப்படும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும்.....

மே-2020

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - சாதுர்யமாக பேசி சகல காரியங்களையும் சாதிக்கும் திறமை உள்ள கன்னி ராசியினரே நீங்கள் உழைப்பினால் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இந்த காலகட்டத்தில்....

ஜூன்-2020

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது, சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்....

ஜூலை-2020

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - பலன்: கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இடைவிடாத உழைப்பினால் பொருளை தக்க வைத்திடும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் ஞானம் நிறைந்த புதிய....

ஆகஸ்டு-2020

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரகநிலை: சுக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன் - லாப ஸ்தானத்தில்....

செப்டம்பர்-2020

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரக நிலை: ராசியில் புதன் - சுக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில்....