Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதிடம்

விருச்சிகம்
இந்த வாரம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். பணவரத்து அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். எதிரிகள் உபாதைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். வழக்குகளை தள்ளிப்போடாமல் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்குவது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம் தேவை. பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.