கடகம்
சிறு விஷயத்திலும் உணர்வுப் பூர்வமாக செயல்படும் கடக ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகஸ்தர்கள் வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள்.