Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதிடம்

மீனம்
இந்த வாரம் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். முடங்கிக் கிடந்த திட்டங்களில் வேகம் பிடிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். மேலிடம் உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிப்பார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பார்கள். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். கலைத்துறையினr பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். பரிகாரம்: அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.