Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரக நிலை: ராசியில் கேது, குரு (வ), சனி (வ) - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: உங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்தும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். பெண்கள் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன் படுத்தி சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள். மூலம்: இந்த மாதம் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் நிம்மதியும், ஒற்றுமையும் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பூராடம்: இந்த மாதம் கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். . தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறமுடியும் என்றாலும் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும். உத்திராடம் 1- ம் பாதம்: இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். வேலைப்பளு சற்றே அதிகரித்துக் காணப்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகளும், முயற்சிகளில் தடைகளும் உண்டாகும். பரிகாரம்: ஸ்ரீரமண மகரிஷியை வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும். அதிர்ஷ்ட கிழமைகள்: மஞ்சள், ஊதா சந்திராஷ்டம தினங்கள்: 14, 15 அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8