Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - பலன்: கற்பனை வாழ்க்கையில் கவனம் செலுத்தாது, நிஜ வாழ்க்கையின் தத்துவம் தெரிந்து வாழும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு வேண்டிய நற்பலனகளை யாராலும் தடுக்க முடியாது. சகோதரர்களின் உதவியால் பொருளாதார முன்னேற்றம் பெற நல்மார்க்கம் உண்டு. எந்த பிரச்சனைகளையும் எளிதாக எதிர்நோக்கும் மனதைரியத்தை பெறுவீர்கள். வீடு, மனை, தாய் வாகனம் போன்ற வகைகளில் தடங்கலும்,அனுகூலமும் சம அளவில் இருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்தினாலும் கூடாத சேர்க்கைகள் குறுக்கிட்டு மனக்குழப்பத்தை தரும் வாய்ப்பு உள்ளதால் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். தந்தையுடன் நல்ல ஒற்றுமையுடன் இருக்க சந்தர்ப்பங்கள் உருவாகும். மூலம்: இந்த மாதம் பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பூராடம்: இந்த மாதம் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும். உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை. பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரநாராயணர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதால் சகல நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழலாம். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 21, 22 அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15