Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன், குரு, சனி , கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும்.காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். மூலம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். பூராடம்: இந்த மாதம் குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். உத்திராடம்: இந்த மாதம் எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி பரிகாரம்: வியாழக்கிழமையில் முல்லை மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம் சேரும். சந்திராஷ்டம தினங்கள்: 12, 13 அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6