Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) - கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: வீண் பேச்சுகளை தவிர்க்க நினைக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். அனுஷம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். கேட்டை: இந்த மாதம் வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். பரிகாரம்: வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும். அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 6, 7 அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27