Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதிடம்

ரிஷபம்
கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராஹூ - என கிரக நிலைகள் உள்ளன. கிரக மாற்றங்கள்: 11-01-2026 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-01-2026 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-01-2026 அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-01-2026 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-01-2026 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணமுடைய ரிஷ்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமத போக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும். கார்த்திகை 2, 3, 4 பாதம்: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ரோகிணி: இந்த மாதம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். மிருகசிரீஷம் 1, 2, பாதம்: இந்த மாதம் செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும். சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18 அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10