Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதிடம்

மீனம்
கிரகநிலை: ராசியில்ராகு, சுக்ரன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு -சுக ஸ்தானத்தில் செவ்வாய் -களத்திர ஸ்தானத்தில் கேது -அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி என வலம் வருகிறார்கள் கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார். 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார். 14-03-2025 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார். பலன்: சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டைக் காக்கும் என்பதை நன்கு உணர்ந்து செயல்படும் மீன ராசி அன்பர்களே இந்த மாதம் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இசை நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறையும். பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். அரசியல்துறையினர் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எதிர்ப்புகள் அகலும் மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள். பூரட்டாதி: இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள். உத்திரட்டாதி: இந்த மாதம் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். ரேவதி: இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20 அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11