Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - பலன்: தகுதிக்கேற்ப வாழ்ககை நடத்தி கிடைத்ததை பெரிதென எண்ணி வாழ்ந்திடும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் மனதிலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். மனதில் தைரியமும், உற்சாகமும் உண்டாகும். வீடு, வாகன வகைகளில் முன்னேற்றமான நற்பலன்கள் உண்டாகும். ஆசாபாச செயல்கள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பதாலும், லாகிரி வஸ்துகளை ஒதுக்கி வைப்பதாலும் மட்டுமே ஆரோக்கிய உடல்நலத்தை பெற முடியும். மாணவர்கள் தங்கள் படிப்பில் தேவையான கவனம் செலுத்துவதால் அனைவரிடமும் நற்பெயர் பெறமுடியும். தந்தை மற்றும் சகோதர, சகோதர வகையில் அன்பான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாகி விடுவீர்கள். எச்சரிக்கை தேவை. அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம். சதயம்: இந்த மாதம் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பூரட்டாதி 1, 2, 3 பாதம்: இந்த மாதம் நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள். பரிகாரம்: ஐயப்பன், அய்யனார், சாஸ்தா ஆகிய தெய்வங்களை தகுந்த முறையில் வழிபாடு செய்வதினால் நற்பலன் உண்டாகும். கிருத்திகை தோறும் முருகனை வழிபாடு செய்யுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - சனி சந்திராஷ்டம தினங்கள்: 25, 26 அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20