Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன் (வ), புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது, சனி (வ) - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: திறமையை மூலதனமாகக் கொண்டு வாழ்வில் முன்னேறும் கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் எடுத்த காரியங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சுபச்செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் முயற்சி சிரத்தை எடுப்பது நன்மை தரும். அவிட்டம்: இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சதயம்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். பூரட்டாதி: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29 அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22, 23 பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்