Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: ராசியில் சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி, கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: வேதனையையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற கும்ப ராசியினரே இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது. அவிட்டம் 3, 4 பாதம்: தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். சதயம்: குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். பூரட்டாதி 1, 2, 3 பாதம்: திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது உங்களுக்கு மன நிம்மதி ஏற்படுத்தித் தரும். பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். பரிகாரம்: ஸ்ரீகுருவாயூரப்பனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31