Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் புதன், சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: கணிவான பார்வையால் அனைவரையும் கவரும் கும்ப ராசியினரே, இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். சதயம்: இந்த மாதம் மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பூரட்டாதி 1, 2, 3 பாதம்: இந்த மாதம் காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி சந்திராஷ்டம தினங்கள்: 12, 13 அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7