Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

மகரம்
பலன்: எந்த சூழ்நிலையிலும் வார்த்தை தவறாமல் நிதானத்தை கடைப்பிடிக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். கலைத்துறையினர் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். புதிய கோயில்கள் நிர்மாணிப்பு பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். உத்திராடம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும். பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். திருவோணம்: இந்த மாதம் எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவபங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அவிட்டம் 1,2 பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 5, 6 அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27