Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரகநிலை: ராசியில் புதன் (வ) - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக் கூடிய எதிலும் பின்வாங்காத அஞ்சா நெஞ்சம் உடைய மகர ராசியினரே இந்த மாதம் வீண் செலவு ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. உத்திராடம் 2, 3, 4 பாதம்: வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருவோணம்: உங்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யுங்கள். அவிட்டம் 1,2 பாதம்: எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10 அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30