Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இந்த மாதம் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. உத்திராடம்: இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் காரியதாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் அமைதி ஏற்படும். லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். திருவோணம்: இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகளையும் காரிய வெற்றியும் வந்து சேரும். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அவிட்டம்: இந்த மாதம் வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும். சந்திராஷ்டம தினங்கள்: 14, 15 அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8