Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதிடம்

மகரம்
கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், குரு - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள். கிரகமாற்றம்: 02.07.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி வக்ரம் ஆரம்பிக்கிறார். 03.07.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார். 17.07.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சூரியன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17.07.2025 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26.07.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29.07.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகர ராசியினரே, இந்த மாதம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது. வருமானம் போதுமென்ற அளவிற்கு இருக்கும். சிலர் பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசியல் துறையினருக்கு கட்சி பணிகளின் காரணமாக கடின உழைப்பு ஏற்படக்கூடும். இரவு பகல் பாராது இவ்வாரம் உழைக்க வேண்டியிருக்கும் கட்சிக்காக நீங்கள் எதுவும் செலவு செய்திருந்தால் அதை கட்சி நிர்வாகம் தங்களிடம் கொடுத்து விடும். பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். உத்திராடம்: 2, 3, 4ம் பாதங்கள்: இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். கவலை வேண்டாம். மனதிற்கு பிடித்த வரன் அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ள்து. தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள். திருவோணம்: இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும். சோதனைகள் வெற்றியாக மாறும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசால் ஆதாயம் உண்டு. அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்: இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். செலவுகளும், அலைச்சலும் கூடும். மனதில் கொஞ்சம் கலக்கமும், ஏமாற்றமும் ஏற்படும். ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். கடன் அடைப்பீர்கள். புது வேலை அமையும். அதிக வட்டிக்கடனை அடைப்பீர்கள். பரிகாரம்: தினமும் காகத்திற்கு சாதம் வைப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியுடன் பல வெற்றிகளை பார்க்க முடியும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 01, 27, 28 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 16, 17