Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோதிடம்

மேஷம்
கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், குரு - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ், கேது - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள். கிரகமாற்றம்: 02.07.2025 அன்று லாப ஸ்தானத்தில் சனி வக்ரம் ஆரம்பிக்கிறார். 03.07.2025 அன்று சுக ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார். 17.07.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17.07.2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26.07.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29.07.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: பேச்சில் அதிக வேகம் உடைய மேஷராசியினரே, நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம். அவர்களின் குறைகளை பொறுமையாக கேட்டு செயல்படுத்துவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பிரபலங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அஸ்வினி: இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அதிகரிக்கும். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்து நின்று வெற்றி கொள்வீர்கள். பரணி: இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சில சமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது. கிருத்திகை: இந்த மாதம் கடந்த காலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்களின் வார்த்தைகள் உத்வேகம் அளிப்பதாக இருக்கும். பரிகாரம்: தினமும் கந்தர் அனுபூதி சொல்லி வர மனக்குறைகள் அனைத்தும் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 07, 08 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 22, 23, 24