Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிராணாயாமம் செய்வதினால் என்ன நன்மைகள் உண்டு தெரியுமா....?

பிராணாயாமம் செய்வதினால் என்ன நன்மைகள் உண்டு தெரியுமா....?
பிராணாயாமம் செய்வதால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும். அதே போல் அதனை செய்யும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 
 

ஒழுங்கில்லாமல் நடந்துகொண்டிருக்கும் மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதின் மூலம் அலை பாயும் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒருபயிற்சி முறை தான் பிராணாயாமம்.
 
ஒழுங்கில்லாமல் நடந்துகொண்டிருக்கும் மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதின் மூலம் அலை பாயும் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒருபயிற்சி முறை. இப்பயிற்சி ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்களை விரட்டியடிக்கும் திறன் படைத்தது.
 
நுரையீரல் செயல்பாடு பிராணாயாமம்வால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும்.
 
பிராணாயாமம்வை தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். நச்சுத்தன்மையை வெளியேற்றுதல் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்களை நீக்க சிறந்த வழியாக விளங்குகிறது பிராணாயாமம் பயிற்சி. உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் உள்ளது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்றாக விளங்குகிறது பிராணாயாமம்.
 
மூச்சுக்காற்றை கட்டுப்படுத்தி அதன் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி ஆசையினாலும், காமத்தினாலும், பொறாமையினாலும் அலைபாயும் மனதை எளிதாக கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்பதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குவதே பிரணாயாமம். 
 
மன ஒருமித்தலை மேம்படுத்தும் மன ஒருமித்தல் சக்தியை மேம்படுத்த பிராணாயாமம் ஒரு சிறந்த வழியாக விளங்குகிறது. இது உங்கள் அறிவு கூர்மையை மேம்படுத்த உதவும்.
 
பிராணாயாமம் அதற்கான விதிமுறைகளின்படி மிக கவனமாக பயிற்சி எடுக்கவேண்டும். தவறினால் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே முறையாக நன்கு பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்பார்வையில் பயிற்சி எடுப்பதே சிறந்ததாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆமணுக்கு எண்ணெய் !!