Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் விளாம்பழம் !!

Advertiesment
மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் விளாம்பழம் !!
விளாம்பழம் சாப்பிடுவதால் ரத்தம் அதிகரித்து, ரத்தத்தில் உள்ள கெட்ட செல்களை அழிக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

விளாம் மரத்தின் வேர், இலை, காய், பிசின், பழம் போன்றவை மருத்துவக் குணங்கள் கொண்டவை. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகிறது. மரத்தின் பட்டையில் பெரோநோன், டேரைகைன் இருக்கிறது. இப்பழத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2 இரும்பு சத்து ஆகியவை உள்ளது.
 
விளாம்பழம் குடல் புழுக்களை அழித்து பேதிகளை குணமாக்குகிறது. மேலும் வயிற்று புண், வயிற்று போக்கு, அஜீரண போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருந்து வருகிறது. இந்த பழம் பித்தப்பை பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது.
 
உடலில் உண்டாகும் அஜீரண குறைபாடு, பசியின்மை, கோழை அகற்றுதல், பல் எலும்பு உறுதிபட, உடல் உள் உறுப்புகள் வலுப்பட என பல வகைகளில் விளாம்பழம் சிறப்பாக பலன் தருகிறது.
 
விளாம்பழத்தை தினமும் சாப்பிடுவதால், மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும். மேலும் இதய துடிப்பை ஒரே சீராக வைத்திருக்கும்.
 
விளாம்பழம் அஜீரணக் கோளாறு பிரச்சனை நீக்கி, பற்களுக்கு உறுதியளிக்கிறது. தயிருடன் விளாம்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
 
விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட்டால் பித்தம், வாந்தி, தலைச் சுற்றல் ஆகியவை நீங்கும். மேலும் விளாம்பழத்தில் உள்ள சதைப் பகுதியை எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் வளர்ச்சிக்கு நல்ல மருந்தாக இருக்கும்.
 
விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும். மேலும் நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூங்கில் அரிசியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!