Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீர் முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள்....!

Advertiesment
நீர் முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள்....!
உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும். 
பல வருடங்களுக்கு முன் சிக்குன்குனியாவால் வந்த முடக்குவாதம் மற்றும் மூட்டுவலி, மூட்டுகள் வளைதல் போன்ற பிரச்னை இருப்போர், தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த முத்திரையைச் செய்துவர, பரிபூரண பலனை உணர முடியும்.
 
எவ்வாறு செய்வது?
 
வலது கை: பெருவிரல் நுனியுடன் மோதிர விரல் நுனியை சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இடது கை: பெருவிரல் நுனியுடன் நடுவிரல் நுனியை சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

webdunia

 
பலன்கள்:
 
முழங்கால் மூட்டு வலி, இடுப்பு வலி, மணிக்கட்டு மற்றும் சிறுமூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கங்களைக் குறைக்கும். மூட்டுகளில் தேங்கும் வாயுவே வலி வரக் காரணம். அதிகப்படியான வாயுவைக் குறைத்து, வலியைக் குறைக்கும்.
 
வயோதிகத்தால் மூட்டுகளில் உள்ள ஈரப்பசை குறைவதால் வறட்சி ஏற்பட்டு, நடக்கும்போதும், காலை நீட்டி மடக்கும்போதும் சத்தம் கேட்கும்.  இதற்கு சந்தி முத்திரை செய்தால், மூட்டுகளில் ஈரப்பசை உருவாகி, மூட்டுக்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் தடுக்கும்.
 
அதிக தூரம் நடப்பவர்கள், மலையேறுபவர்கள், நின்றுகொண்டே வேலைபார்ப்பவர்கள் போன்றோர், சந்தி முத்திரை செய்ய உடனடியாக வலி  குறையும்.
 
இடுப்பு எலும்புத் தேய்மானம், சவ்வு விலகல், ஈரப்பசை குறைதலுக்கு  சிறந்த பலன் அளிக்கிறது. மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை நார் கிழிவுகளில் ஏற்படும் பிறழ்வு, வலி, வீக்கத்துக்குத் தீர்வு கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகற்காய் குழம்பு செய்ய...!