Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுக்கும் அபான வாயு முத்திரை...!

Advertiesment
ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுக்கும் அபான வாயு முத்திரை...!
நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து, ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்து சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 40 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம். இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட குணப்படுத்தும். இதனால் இதற்கு “மிருத்யு சஞ்சீவி” என்று பெயர்.
 
நன்மைகள்:
 
இது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும். இதை செய்வதால் உயர் இரத்த அழுத்த நோய்  15 நிமிடங்களில் குறையும். நெஞ்சு படபடப்பு குறையும்.
 
வாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து நிவாரனம் கிடக்கும். மூலநோய் குணமாகும். உடலில் கழிவுகளை வெளியேற்றும். உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.
 
சிறிநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி, சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும். இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு  தொல்லைகளை நீக்கும்.
 
இருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் அது நீங்கி நெஞ்சு வலி குறையும். இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்து  வந்தால் இருதயம் பலப்படும்.
 
நாற்காலியில் அமர்ந்து, தரையில் கால்களை ஊன்றியபடியோ, தரை விரிப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்தோ செய்யலாம். ஆனால், படுத்துக்  கொண்டு செய்யக் கூடாது. கர்ப்பிணிகள் இந்த முத்திரை செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
 
காலை, மாலை இருவேளையும் 15-40 நிமிடங்கள் வரை செய்யலாம். சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் செய்ய வேண்டும். வாந்தி, பேதி பிரச்சனை இருக்கும்போது செய்யக் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரெல்லாம் அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது...?