Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை விவகாரத்து செய்கிறார் பில்கேட்ஸ்: சட்டப்படி பிரிய முடிவு

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (07:33 IST)
மனைவியை விவகாரத்து செய்கிறார் பில்கேட்ஸ்: சட்டப்படி பிரிய முடிவு
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஒருவரும் மைக்ரோசாப்ட் அதிபருமான பில்கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகிய இருவருக்கும் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது தனது மனைவியை அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இருவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருமண பந்தத்தில் இருந்து மட்டுமே விலகுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை மூலம் தொண்டுப் பணிகளில் இருவரும் இணைந்து செயலாற்ற முடிவு செய்ததாகவும் இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் 
 
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மக்களும் சுகாதாரமாக வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் என்றும் அதற்காக தாங்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இனிமேலும் தம்பதிகளாக தங்களால் தொடர முடியாது என்று முடிவு செய்து பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் தங்களுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்