பிக்பாஸ் ஷிவானியுடன் நடித்த நடிகர் விவாகரத்து!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி உடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்
பகல் நிலவு என்ற தொலைக்காட்சித் தொடரில் ஷிவானி மற்றும் அஸீம் இருவரும் இணைந்து நடித்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அஸீமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை
இந்த நிலையில் தனது மனைவியை திடீரென அஸீம் விவாகரத்து செய்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் சட்டப்படி பிரிந்து விட்டோம் என்றும், இது குறித்து மேலும் விரிவாக நான் பேச விரும்பவில்லை எனவும் அஸீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது