கூகுள் நிறுவத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையை அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை எடுத்து உள்ளார்.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் ஊழியர்களுக்கு போனஸ் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பணவீக்கம் பொருளாதார மன்ற நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுந்தர் பிச்சை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.