ஐரோப்பிய கண்டம், மதெய்ரா தீவில் ஜிகா என்னும் தொற்று நோயை ஏற்படுத்தும் வைரஸ் பரவி வருகிறது.
ஜிகா வைரஸ் எடீஸ் என்னும் கொசுக்கள் அதிகமாக உள்ள இடத்தில் தான் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஜிகா வைரஸ் எளிதில் பரவும் தன்மைக் கொண்டதாகவும், தொற்று நோய் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ் சுழலுக்கு தகுந்த விளைவை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கர்பினி பெண்களை தாக்கும் இந்த வைரஸ் குழந்தைகளுக்கு பிறப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு மோசமானது என்றும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளது.
இந்த ஜிகா வைரஸ் பிரேசிலில் பரவ ஆரபித்து தற்போது உலகம் முழுதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.