கரன்சிகளை சிதறவிட்ட இளைஞரை கதறவிட்ட போலீஸார்.. நடந்தது என்ன?

சனி, 3 ஆகஸ்ட் 2019 (13:08 IST)
துபாயில் சமூக வலைத்தளத்தில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக கரன்சி நோட்டுகளை சிதறவிட்டு புகைப்படம் எடுத்த ஆசியாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளது.

துபாயில் வசித்து வரும் ஆசியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் எப்படியாவது பிரபலமடைய வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன் படி துபாய் கரன்சி நோட்டுகளை பொது இடத்தில் அள்ளி வீசி அத்தனை பேரையும், அதிரவைத்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து துபாய் போலிஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அனைவரும் பேச வேண்டும் எனவும், தனது செயல் வைரலாக பரவ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார். இதனைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வெட்டி புகழுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துபாய் போலீஸார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்: சேரனுக்காக உருகும் வசந்த பாலன்