Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேம் விளையாட வேலையை விட்டு இளைஞர்

கேம் விளையாட வேலையை விட்டு இளைஞர்

Advertiesment
கேம் விளையாட வேலையை விட்டு இளைஞர்
, திங்கள், 18 ஜூலை 2016 (20:12 IST)
இளைஞர் ஒருவர் போகிமான் கேமை விளையாடுவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.


 
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த அப்படி ஒரு ரசிகர் டாம் க்யூரி (24), ’போகிமான் கோ’ என்ற கேமுக்கு அடிமையானதால் தனது வேலையையே ராஜினாமா செய்துள்ளார். மேலும், ‘போகிமான் கோ’ கேமை முழுவதும் முடிக்காமல் வேறு எந்த செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் கேமின் எந்த நிலையில் இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பலர் அவரை பின்தொடர்ந்து அறிந்து வருகிறார்கள்.

இது குறித்து டாம் க்யூரி கூறுகையில், “இந்த கேம் விளையாடும் அனைவரையும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும், போகிமான் கோ’ கேமை விளையாடும் போது, நிஜ உலகைப் பற்றியும் கவனமாக இருந்தால், எதிர்பாராத விபத்துக்களையும், பொது இடங்களில் தொந்தரவுகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.” என்றார்.

தி போகிமான் கம்பெனி என்ற நிறுவனத்தால் ‘போகிமான் கோ’ என்ற கேம் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. உலகின் சில நாடுகளில் மட்டும் தான் இந்த கேம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போகிமானோ ஜிபிஎஸ் மற்றும் கேமரா தொழில்நுட்பத்துடன் இணைந்து விளையாடும் ஒரு ரியாலிட்டி கேம். கேமை ஆன் செய்தவுடன் மொபைல் போனின் ஜிபிஎஸ் உடன் இணைந்து விடும். நாம் நிஜத்தில் நகர்ந்தால் அந்த கேமில் நம்முடைய கேரக்டரும் நகரும். சில இடைவெளியில் ‘மான்ஸ்டர்கள்’ எனப்படும் குட்டிச்சாத்தான்கள் இருப்பதாக காண்பிக்கும். அந்த இடத்திற்கு நாம் நடந்து சென்றால் அவற்றை பிடிக்க முடியும். இப்படித் தான் இதை விளையாட வேண்டும். விளையாடும் அனைவரும் அந்த கற்பனை உலகிற்கு அழைத்து செல்வது போல் அமைந்துள்ளதால் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது இந்த போகிமான் கோ.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தலைமையின் எதிர்ப்பை மீறி உண்மை புத்தகத்தை வெளியிடம் ஆ. ராஜா